என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆன்ட்ராய்டு டி.வி.
நீங்கள் தேடியது "ஆன்ட்ராய்டு டி.வி."
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. #androidtv
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடலை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்திருக்கிறது. பெயரிடப்படாத இரண்டு டி.வி. மாடல்கள் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
கூகுள் சான்று பெற்றிருப்பதோடு, புதிய டி.வி.யில் ஹை-டைனமிக் ரேன்ஜ் (ஹெச்.டி.ஆர்.) இருப்பதால் காட்சி தரம் தெளிவாக இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தொலைகாட்சிகளில் அதிகாரப்பூர்வ கூகுள் பிளே வசதி கொண்டிருப்பதால், செயலிகள், கேம்கள், திரைப்படம் மற்றும் இசை உள்ளிட்டவற்றுக்கான வசதிகள் கொண்டிருக்கின்றன.
புதிய டி.வி. மாடல்கள் ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி, டி.டி.எஸ். சவுன்ட் சான்று, குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. EMMC ஸ்டோரேஜ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், MHL கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் அசிஸ்டன்ட் இருப்பதால் குரல் மூலம் தேடலாம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் புதிய டி.வி.யில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சொந்த பியூர் சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டால்பி மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி. ஆடியோ சான்று பெற்றிருக்கிறது.
இந்த டி.வி. மாடல்களில் 2x12 வாட் ஸ்பீக்கர்களும், மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும் இகோ எனர்ஜி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்களின் விற்பனை இம்மாதம் துவங்கும் என்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த டி.வி. கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K UHD HDR10 டி.வி. மாடல்களின் விலை முறையே ரூ.51,990 மற்றும் ரூ.61,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகமான ஒன்பது மாதங்களில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகியிருக்கிறது. #Xiaomi #MiTV
இந்தியாவில் சியோமி நிறுவனம் ஒன்பது மாதத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக Mi எல்.இ.டி. டி.வி. மாடல்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. பத்து லட்சம் விற்பனையில் நான்கு Mi டி.வி. வேரியன்ட்களும் அடங்கும். இத்தகைய மைல்கல் விற்பனை சந்தையில் முதல்முறை என்பதோடு, சியோமி இந்தியாவிற்கு முக்கிய மைல்கல் ஆக இருக்கிறது.
2018 இரண்டாவது காலாண்டில் சியோமி நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. பிரான்டாக உருவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஐ.டி.சி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களின் மூலம் சியோமி நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான Mi டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 11ம் தேதி வரை நடைபெற்ற தீபாவளி விற்பனையில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான Mi எல்.இ.டி. டி.வி. மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. அந்த வகையில் ஒரே மாதத்திற்குள் சியோமி நிறுவனம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான டி.வி.க்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் ஆன்லைனில் அதிகம் விரும்பப்பப்பட்ட டி.வி. மாடலாக இருக்கிறது. Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 32 இன்ச் மாடல் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக விருப்பங்களை பெற்ற ஆன்லைனில் பிரபல டி.வி. மாடலாக இருக்கிறது.
2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019
2019ம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா துவங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இவ்விழாவில் எதிர்பார்க்கப்படும் சாதஎனங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கூடிய வசதி கொண்ட OLED டி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய டி.வி. பார்க்க இதுவரை வெளியான எல்.ஜி. டிஸ்ப்ளே ப்ரோடோடைப்களை போன்றே காட்சியளிக்கிறது.
மேலும் புதிய தொழில்நுட்பம் உண்மையான சாதனம் போன்றே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மடிக்கக்கூடிய மொபைல் போன் ஒன்றையும் எல்.ஜி. அறிமுகம் செய்யலாம் என பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தெரிவித்து இருந்தார்.
சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், முதலில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டுகளை போன்றே எல்.ஜி. நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஃபால்கன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #androidtv
ஐஃபால்கன் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள்- ஐஃபால்கன் 40F2A மற்றும் ஐஃபால்கன் 49F2A இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சமீபத்தில் நிறைவுற்ற பிளிப்கார்ட் வலைதளத்தில் பிரபலமான ஆன்ச்ராய்டு டி.வி. மாடல்களில் ஒன்றாக இருந்தது என ஐஃபால்கன் தெரிவித்துள்ளது. ஐஃபால்கன் F2A சீரிஸ் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் ஆகும். இவற்றில் ஏ.ஐ. அசிஸ்டன்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
இவற்றில் IPQ என்ஜின், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்காஸ்ட், வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டன்ட், ஏ.ஐ. மூலம் இயங்கும் விர்ச்சுவல் சூப்பர் அசிஸ்டன்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய F2A சீரிஸ் மாடல்களில் பொழுதுபோக்கு, தகவல் தேடல் மற்றும் வீட்டில் உள்ள இணைக்கப்பட்ட சாதனங்கள் உள்ளிட்டவற்றை பயனர்கள் தங்களது குரல் மூலம் இயக்க முடியும்.
ஐஃபால்கன் 40F2A மாடலில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 2 ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைபை மற்றும் 320 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐஃபால்கன் 40F2A மற்றும் 49F2A மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 எனும் சிறப்பு விலையில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்ட்களும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
டி.சி.எல். நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு QLED டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. #smarttv
டி.சி.எல். எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு QLED டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. டி.சி.எல். 65X என அழைக்கப்படும் முதல் டி.வி. மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் மற்றும் 4K UHD டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆன்ட்ராய்டு டி.வி.யில் 4K UHD 3840x2160 பிக்சல் மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே காட்சிகளை மிக தெளிவாகவும், இயற்கை நிறங்களை பிரதிபலிக்கும் வசதி கொண்டுள்ளது. குவான்டம் டாட் QLED தொழில்நுட்பம் நிறங்களை இயற்கையாக பிரதிபலிக்கச் செய்கிறது.
டி.சி.எல். புதிய டி.வி. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது. டி.சி.எல். 65X4 மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள், டால்பியின் மேம்படுத்தப்பட்ட டி.டி.எஸ். (DTS) போஸ்ட் பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. 64-பிட் குவாட்-கோர் சி.பி.யு. மற்றும் டூயல்-கோர் ஜி.பி.யு., 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.
இத்துடன் வாய்ஸ் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், டி.வி.யை குரல் மூலம் எளிமையாக இயக்க முடியும். இத்துடன் பில்ட்-இன் குரோம்கேஸ்ட் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், விரும்பிய கேம்கள், வீடியோ மற்றும் மொபைல் போனில் உள்ள செயலிகளை காஸ்ட் செய்து கொள்ள முடியும்.
டி.சி.எல். நிறுவனம் புதிய டி.வி.யுடன் டி.சி.எல். எஸ்6500 அறிமுகம் செய்துள்ளது. இதில் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மற்றும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் IPQ இன்ஜின், ஹெச்.டி.ஆர். 10 சப்போர்ட், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்கேஸ்ட் மற்றும் வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லைட், 1.5 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
டி.சி.எல். 65X4 அக்டோபர் 25-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும், பின் இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இதன் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது, எனினும் அமேசானில் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் இந்த டி.வி. ரூ.1,09,990 விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X